தஞ்சாவூரில் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் என இருபாலருக்கும்
பல்வேறு முன்னணி தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்
பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின்
சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே
ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டு
இந்த மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
பல்வேறு தனியார் துறை நிறுவனங்களில் இருந்து காலியாக உள்ள பணியிடங்களுக்கு
ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித்தகுதி :
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரையிலான
பள்ளிக்கல்வி முடித்தோர் டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள் மற்றும் பொறியியல்
பட்டதாரிகள் உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை
பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள்:
நடைபெறும் இடம்:
அரசு கலைக்கல்லூரி,
கருப்பூர் சாலை, பாலக்கரை,
கும்பகோணம்.
நடைபெறும் நாள்:
27.11.2021
நேரம்: காலை 08:30 மணி முதல் மாலை 03.00
மணி வரை
குறிப்பு:
முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது அனைத்து வகையான சான்றிதழ்களின்
ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துச்
செல்ல வேண்டும்.
CLICK HERE FOR MORE JOBS
DOWNLOAD NOTIFICATION